Wednesday, February 18, 2009

சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி பதில்

கொசு என்னைக் கடிக்கும்போது அதைப் பட்டென்று அடித்துக் கொன்றுவிடுகிறேன். அச் சமயங்களில் ஒரு குருர திருப்தி எனக்குக் கிடைக்கிறது. எனக்குள் மிருக குணம் தலைதூக்குகிறதா?

ஒரு புலியையோ சிங்கத்தையோ வேட்டையாடும் துணிச்சல் உங்களிடம் இல்லை. உங்களால் முடிந்தது ஒரு கொசு வேட்டைதான். எந்த மிருகமும் மனிதனைப் போல குருர திருப்திக்காக கொடூரமாக நடந்துகொள்வது இல்லை. புலி கூட மானை அடிப்பது உணவிற்காகத்தான் கொசுவை அடிப்பதில் குரூர திருப்தி என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

எல்லா உயிர்களிடத்திலும் கருணையாக இருக்கவேண்டும் எனச் சொல்கிறார்கள். நோயைக் கொண்டுவரக் கூடிய கொசுவிடம் எப்படிக் கருணையோடு இருக்கமுடியும்?

.கருணை வேறு பரிவு வேறு ஒரு உயிரிடத்தில் அனுதாபம் கொண்டு வெளிப்படுத்தும் பரிவை கருணை எனக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

எனக்குள் இருக்கும் உறுத்தலை நேரடியாகவே கேட்கிறேன். கொசுவை கொல்வது பாவச் செயலா?
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. உங்கள் செயலுக்கான விளைவு எப்படி இருந்தாலும் அதை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாரானால் அது நல்லதா அல்லது கெட்டதா என்ற கேள்வியே வராது. கர்ம வினைகள் பற்றிய கவலையே இராது.

No comments:

Post a Comment