Monday, February 23, 2009

Library Stock Verification


Latest information available in the 
swamys guide about the stock verification

பாலிடெக்னிக் கல்லூரி நூலகர்

அன்பு நண்பர்களே, வணக்கம். 
பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் நூலகராக பணியாற்றும் நான் நமது சக தோழர்களிடம் தொடர்பு கொண்டு நூலகம் தொடர்பான விபரங்களை பரிமாறிக் கொள்ளும் முயற்சியாக இத்னை துவங்கி உள்ளேன். நூலகர் தொடர்பான பணி விதிகள், பணிப் பொறுப்புகள் இதர துறை நூலகர்கட்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகள் இவைகளை பற்றி அலசவே இந்த முயற்சி. வாருங்கள், கருத்துக்களை முன் வையுங்கள்.
அன்புடன்

Friday, February 20, 2009

Mother Birthday 21-02-2009


Wednesday, February 18, 2009

சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி பதில்

கொசு என்னைக் கடிக்கும்போது அதைப் பட்டென்று அடித்துக் கொன்றுவிடுகிறேன். அச் சமயங்களில் ஒரு குருர திருப்தி எனக்குக் கிடைக்கிறது. எனக்குள் மிருக குணம் தலைதூக்குகிறதா?

ஒரு புலியையோ சிங்கத்தையோ வேட்டையாடும் துணிச்சல் உங்களிடம் இல்லை. உங்களால் முடிந்தது ஒரு கொசு வேட்டைதான். எந்த மிருகமும் மனிதனைப் போல குருர திருப்திக்காக கொடூரமாக நடந்துகொள்வது இல்லை. புலி கூட மானை அடிப்பது உணவிற்காகத்தான் கொசுவை அடிப்பதில் குரூர திருப்தி என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

எல்லா உயிர்களிடத்திலும் கருணையாக இருக்கவேண்டும் எனச் சொல்கிறார்கள். நோயைக் கொண்டுவரக் கூடிய கொசுவிடம் எப்படிக் கருணையோடு இருக்கமுடியும்?

.கருணை வேறு பரிவு வேறு ஒரு உயிரிடத்தில் அனுதாபம் கொண்டு வெளிப்படுத்தும் பரிவை கருணை எனக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

எனக்குள் இருக்கும் உறுத்தலை நேரடியாகவே கேட்கிறேன். கொசுவை கொல்வது பாவச் செயலா?
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. உங்கள் செயலுக்கான விளைவு எப்படி இருந்தாலும் அதை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாரானால் அது நல்லதா அல்லது கெட்டதா என்ற கேள்வியே வராது. கர்ம வினைகள் பற்றிய கவலையே இராது.

வார்த்தைகள் வலிமையானதா?

சரியான நேரத்தில், சரியான நோக்கத்தில் வெளிப்படும் வார்த்தைகள் வலிமையானதுதான். மகாத்மா காந்தியின் சீடர்களில் முக்கியமானவர் வினோபா பாவே. தெலுங்கானாவில் நில மீட்புக்கான ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். அப்போது பாதிக்கப்பட்ட போச்சம்பள்ளி கிராமத்துக்கு வினோபா வந்திருந்தார். அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் உபரி நிலங்களை தாருங்கள் என நில சுவான்தாரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒருவர் ஐந்து ஏக்கர் நிலத்தை பூமி தான இயக்கத்திற்கு தருவதாக அறிவித்தார். அவரிடம் வினோபா பாவே அவரது குடும்பத்தில் எத்தனை பேர் எனக் கேட்டார். அவரும் நான்கு பேர் எனத் தெரிவித்தார். மொத்தம் எவ்வளவு நிலம் எனக் கேட்டார். ஐநூறு ஏக்கர் என அவரும் தெரிவித்தார். என்னையும் உங்களது சகோதரராக ஏற்றுக்கொண்டு எனக்கான பங்கினை தரமாட்டீர்களா எனக் கேட்டார். நெகிழ்ந்து போன அவரும் வினோபா பாவேவினை சகோதரராக ஏற்று பூமிதான இயக்கத்திற்கு 500 ஏக்கர் நிலத்தினை தானமாக அளித்தார். வலிமையான வார்த்தைகளில் இருந்தே அந்த இயக்கம் ஆரம்பித்தது.